நடைபெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர், பிரதமர் என்.ஆர்.சி விவகாரத்தில் தெளிவாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளா
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், செவ்வாய்க்கிழமையில் இருந்து வியாழக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ராமசாமி, “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அச்சத்தை தீர்ப்பது அரசின் கடமை. ஆனால், முகாம்களை எதற்காக அமைக்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், என்.ஆர்.சி. குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதில் பிரதமர் தெளிவாக உள்ளார்” என்று பதிலளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் என்ஆர்சி அமல்படுத்தப்படும் என பிரதமர் சொல்லவில்லை. வராத என்.ஆர்.சி.யை வந்துவிட்டால்” என யூகத்தில் பேசினால் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.