அடல் பென்ஷன் திட்டத்தில் சேர்வது எப்படி? பலன் என்ன

18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள். அடிப்படைத் தேவை வங்கி அல்லது தபால் நிலையத்தில் ஒரு சேமிப்புக் கணக்கு மட்டு


திட்டம் அதற்கு முன் இருந்த சுவவலம்பன் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. டிரைவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம்.


8 வயதில் இத்திட்டத்தில் இணைபவர் மாதம் தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை 42 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். ரூ.42 செலுத்தி வந்தால் 60 வயதுக்குப்பின் மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ரூ.210 செலுத்தி வந்திருந்தால் 60 வயதுக்குப் பின் 5000 ரூபாய் கிடைக்கும்.

முதலில் மாதாந்திர பங்களிப்புத் தொகை செலுத்திய நாள் எதுவோ அதே நாளில் மாதம் தோறும் தானாகவே சேமிப்புக் கணக்கிலிருந்துதா மாதாந்திர பங்களிப்புத் தொகை கழித்துக்கொள்ளப்படும். 5ஆம் தேதி முதல் முறை பங்களிப்புத் தொகையை செலுத்தியிருந்தால், ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி அந்தத் தொகை தானாகவே கழித்துக்கொள்ளப்படும்.