முதலில் மாதாந்திர பங்களிப்புத் தொகை செலுத்திய நாள் எதுவோ அதே நாளில் மாதம் தோறும் தானாகவே சேமிப்புக் கணக்கிலிருந்துதா மாதாந்திர பங்களிப்புத் தொகை கழித்துக்கொள்ளப்படும்.
5ஆம் தேதி முதல் முறை பங்களிப்புத் தொகையை செலுத்தியிருந்தால், ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி அந்தத் தொகை தானாகவே கழித்துக்கொள்ளப்படும்.
கணக்கிலிருந்து தானாகவே கழித்துக்கொள்ளும் வசதியை விரும்பாதவர்கள் தவிர்க்கலாம். ஆனால், மாதம் தோறும் தாங்களே பணத்தைச் செலுத்த வேண்டும். தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும்.
(ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்படுவதுடன், அடல் பென்ஷன் திட்டலிருந்து கணக்கு நீக்கப்படும்.)
குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் இத்திட்டத்தில் இருக்க வேண்டும். எனவேதான் 40 வயதுக்கு மேல் இத்திட்டத்தில் இணைய முடியாது. எந்த வயதில் அடல் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால், எவ்வளவு பணம் செலுத்த வேண்டும், 60 வயதுக்குப் பின் கிடைக்கும் பென்ஷன் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை பின்வரும் அட்டவணையில் காணலாம்.