மாறுவது எப்படி

பென்ஷன் தொகை மற்றும் மாதாந்திரத் பங்களிப்பு தொகையை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை, ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.


அதாவது, 18 வயதில் ரூ.84 செலுத்தி 60 வயதுக்குப் பின் 1000 ரூபாய் ஓய்வூதியம் பெற முடிவு செய்திருந்தவர், ஏப்ரல் மாதம் வரும்போது மாதாந்திர பங்களிப்புத் தொகையை கூட்டவோ குறைக்கவோ செய்ய முடியும். அப்போது, 60 வயதுக்குப் பின் கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையும் மாறும்.

வரி விலக்கு உண்டா?

இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இணையான வரிச்சலுகை உண்டு. வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 80சிசிடி 1பி (Section 80CCD 1B) மூலம் ரூ.50,000 வரை வரிச்சலுகையைப் பெறலாம். பிரிவு 80சி (Section 80C) மூலம் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகையுடன் கூடுதலாக இந்த வரிச் சலுகை கிடைக்கும்.