மெட்ரோவின் கட்டண சலுகை

    கோயம்பேடு வடபழனி ஆலந்தூர் வழித்தடமாக இருந்தாலும் சரி, திருமங்கலம் மற்றும் சென்ட்ரல் இடையிலான வழித்தடமாக இருந்தாலும் நிச்சயம் நாம் நினைத்த நேரத்திற்கு நாம் அலுவலகத்திற்கு சென்றுவிட முடியாது.  அண்ணா சாலை நந்தனம், சைதாப்பேட்டை வழித்தடத்திலும் போக்குவரத்து கடும் நெரிசல் தான் நிலைமை.ஆகவேதான் சென்னை மெட்ரோ ரயிலில் தான் அலுவலகம் செல்வோர், மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பயணிக்க விரும்புகிறார்கள். ஆனால் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்களில் செல்வதை விரும்புவதில்லை. மக்களின் கருத்தைக்கொண்டு  சென்னை மெட்ரோ தற்போது "அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில்மெட்ரோ பயணச் சீட்டுகளில் 50 சதவீத கட்டணத் தள்ளுபடி" அறிவித்துள்து . எனவே இனி விடுமுறை நாட்களில் வெளியில் செல்வதற்கு மக்கள் மெட்ரோ ரயிலை அதிகம் பயன்படுத்துவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது